Gavitha / 2015 செப்டெம்பர் 04 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை, கூமூட் தோட்டத்தில் காடுகளை அண்டிய பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுவதாகவும் இதனால் அத்தோட்டத் தொழிலாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள காடுகளை அண்டிய தோட்டப் பகுதிகளிலேயே, சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்தவகையில் புதன்கிழமை (02) தேயிலை மலையில் சில தொழிலாளர்கள் வேலை செய்துக்கொண்டிருக்கும் போது, சிறுத்தையொன்று செல்வதை அவதானித்து பயந்துள்ளனர்.
பல இடங்களில் தேயிலைச் செடிகளுக்குள் பதுங்கியிருக்கும் சிறுத்தைகள் தொழிலாளர்களைத் தாக்கியச் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. எனவே, இவ்விடயம்; குறித்து வனஜூவராசிகள் திணைக்களமும் தோட்டநிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
15 minute ago
23 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
50 minute ago
53 minute ago