Sudharshini / 2015 செப்டெம்பர் 14 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேன்சர்ட மேற்;பிரிவுத் தோட்டத்தில் 13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞனை நோர்வூட்
பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (14) கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சிறுமி, பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, இளைஞனைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சிறுமியின் தாய் கொழும்பில் வேலை செய்துவருவதாகவும் பாட்டியின் பராமரிப்பிலேயே சிறுமி வளர்ந்து வருவதாகவும் தெரியவருகிறது.
ஞாயிற்றுக்கிழமை (13) இரவு, குறித்த இளைஞன் தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சிறுமி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .