Sudharshini / 2016 ஜனவரி 06 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளச்சிக்கடை பகுதியில் ஏழு வயது சிறுமியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவரை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொனராகலை நீதவான் நீதிமன்ற நீதவான் ஆர்.எம்.குணதிலக்க உத்தரவிட்டார்.
கடந்த சனிக்கிழமை (02) காலை, தனது வீட்டிலிருந்து சிறிது தூரத்திலுள்ள கடைக்குச் சென்றுக்கொண்டிருந்த சிறுமியை, பற்றைக்காட்டுக்குள் தூக்கிச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தி விட்டுத் தலைமறைவாகி இருந்த நிலையிலேயே மேற்படி முதியவரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
அவரை செவ்வாய்க்கிழமை (05) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த சிறுமி, ஆபத்தான நிலையில் தொடர்;ந்தும் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026