Kogilavani / 2016 ஜனவரி 03 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வாஜா
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளச்சிக்கடை பகுதியில் ஏழு வயதுச் சிறுமியை வன்புணர்ந்த, அதே பகுதியைச் சேர்ந்த 60வயது மதிக்கத்தக்க முதியவரொருவரை சனிக்கிழமை (02) மாலை மொனராகலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சிறுமி ஆபத்தான நிலையில் மொனராகலை வைத்தியசாலையின் விசேட தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை (02) காலை, தனது வீட்டிலிருந்து சிறு தூரத்திலுள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்த போது, மேற்படி நபர் சிறுமியை பற்றைக்காட்டுக்குள் தூக்கிச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தி விட்டுத் தலைமறைவாகி இருந்துள்ளார். இந்நிலையில், அவ்வழியே சென்றவர்கள் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், தலைமறைவாகி இருந்த மேற்படி நபரை சனிக்கிழமை மாலை பொலிஸார் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
19 Apr 2026