2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

’ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தே களமிறங்குவார்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ம​ஹேஷ் கீர்த்திரத்ன

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவே களமிறக்கப்படுவார் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹார, மிக விரையில் அதற்கான கொள்கைத்திட்டம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

மாத்தளை - உக்குவளையில் (25) ந​டைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவாகும் ஒருவர், கிராமங்களின் நிலைமைகள் பற்றி அறிந்திருக்க வேண்டியதோடு அரசாங்க அதிகாரிகளுடன் பணியாற்றுவதற்கும் தெரிந்திருக்க வேண்டுமெனவும் சிலர் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பின்பு அவற்றை மறந்துபோய்விடுவதாகவும் தெரிவித்தார்.

மாத்தளை பூஜாகொட பகுதிக்கு பாலம் ஒன்று அமைக்க வேண்டிய அவசியம் இல்லை எனப் பலரும் கூறியதால், அதற்கான நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாவும் அப்பிரதேசத்தின் மீது அக்கறை உள்ளவர்களால் பாலம் அமைக்கு பணிகளை ஆரம்பிக்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .