Kogilavani / 2021 மார்ச் 08 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யார் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஹலீம், தற்கொலைத் தாக்குதல்களின் சூத்திரதாரி வெளிப்படுத்தப்படும்வரை அச்சுறுத்தல் தொடரும் என்றும் தெரிவித்தார்.
கண்டியின் மாவில்மடையில், நேற்று முன்தினம் (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த அறிக்கை வெறும் ஆவணமாக மட்டுமே உள்ளது என்றும் அறிக்கையை எதிர்பார்த்திருந்த அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றும் சாடியுள்ளார்.
'பொறுப்பானவர்களில் சிலர் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்பது இரகசியமல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எமக்கு, அறிக்கையில் ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது. இன்னும் பல தொகுதிகள் உள்ளன என்று கூறப்படுகிறது. அவற்றில் சில இரகசியமாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கையில் தெளிவு இல்லாத நிலையே காணப்படுகின்றது' என்றார்.
அதனால்தான் கிறிஸ்தவர்கள் கறுப்பு ஞாயிறுப் போராட்டத்தை நடத்தினர் என்றும் இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னர், முஸ்லிம், சிங்கள மக்களிடையே வெறுப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இரு சாராருக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது என்றும் இந்தப் பிளவை எப்போது சரிசெய்ய முடியும் என்று தன்னால் கற்பனை செய்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்தை கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்கள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026