Editorial / 2018 நவம்பர் 12 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட, ஹட்டன் - டன்பார் வீதியின் கீழ்ப் பகுதியைப் புனரமைப்புச் செய்வதற்கு, நகர சபையினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்படி வீதியானது, புனரமைப்பின்றி குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், இவ்வீதியுடாகப் பயணிப்பதில், பிரதேச மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில், நகர சபையின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து, அவ்வீதியை புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை, நகர சபை மேற்கொண்டுள்ளது.
விசேடப் பொருளாதார உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மேற்படி வீதியைப் புனரமைப்புச் செய்யவுள்ளதாக, ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் தலைவர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .