Kogilavani / 2016 ஜனவரி 11 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா, ஆர்.கோகுலன், பாலித ஆரியவன்ச
பண்டாரவளை- வெலிமடை பிரதான வீதி, டயரபாவிலுள்ள மதுபானசாலையொன்றின் மீது, பிரதேச மக்கள் நேற்று மாலை மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடி படையினர் மற்றும் கலகத்தடுப்பு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி மதுபானசாலையில் கடந்த 31 ஆம் திகதி ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 27 வயதுடைய காந்தி விஜயகாந்த் என்பவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவர் நேற்று(10) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இளைஞனின் மரணத்தை தொடர்ந்தே மேற்படி மதுபானசாலையின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் மற்றுமொரு கடைக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.







உயிரிழந்த இளைஞன்

4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago