Janu / 2025 நவம்பர் 10 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை ,தனமல்வில - வெல்லவாய வீதியின் கித்துல்கொடே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வேன் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனமல்வில, சர்வோதைய வீதியைச் சேர்ந்த 45 வயதுடைய இந்திக்க செனெவிரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வேன் தனமல்வில பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் இதில் படுகாயமடைந்த வேன் சாரதி தனமல்வில பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது சாரதி மட்டுமே வேனில் பயணித்துள்ளதாகவும் அவருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் விபத்திற்கான காரணம் எனவும் தெரியவருகிறது.
டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டு வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சுமனசிறி குணதிலக்க
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago