2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

டிரக்டரிலிருந்து விழுந்து மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

Kogilavani   / 2021 மார்ச் 16 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமனசிறி குணத்திலக்க

மொனராகலை, ஹெவரியவெல பிரதேசத்தில், டிரக்டரிலிருந்து விழுந்து மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர், நேற்று முன்தினம் (15) உயிரிழந்துள்ளார் என்று, எதிமலை பொலிஸார் தெரிவித்தனர்.

பிபிலை-நாகல பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எம்.ஜயவர்தன என்பவரே (வயது 58) இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சோளத்தை ஏற்றிக்கொண்டு டிரக்டர் வாகனத்தில் பயணித்த போதே, மேற்படி டிரக்டரிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த அவரை, உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X