Editorial / 2026 மார்ச் 18 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்
நுவரெலியா - ஹாவாஎலிய பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த மூன்று பிள்ளைகளின் தந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குறித்த விடுதியின் முகாமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய அன்பழகன் என்பவர், குறித்த விடுதிக்கு கடந்த 14ஆம் திகதி சென்று உணவைப் பெற்றுக்கொண்டு வெளியேற முற்பட்டுள்ளார். இதன்போது அவருக்கும் விடுதி முகாமையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், முகாமையாளர் அவரைத் தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த அன்பழகன் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மகன் தெரிவிக்கையில், "எனது தந்தை உணவை எடுத்துக்கொண்டு வெளியே வரும்போதே அநியாயமாகத் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் செயலுக்குக் காரணமானவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, எமக்கு முறையான நீதி கிடைக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
உயிரிழந்த அன்பழகனின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் (18) அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, உடல் நுவரெலியா மாநகர சபைக்குச் சொந்தமான பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இச்சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026