Princiya Dixci / 2016 பெப்ரவரி 23 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு. இராமசந்திரன்
ஹட்டன், வுட்லன்ட் பகுதியில் கடை உரிமையாளரான பெண்ணின், தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார்கள் என்ற சந்கேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹட்டன் மாவட்ட நீதிபதி பீ.பி. லியனகே, இன்று செவ்வாய்க்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த வர்த்த நிலைத்துக்கு நேற்று திங்கட்கிழமை (22) பொருட் கொள்வனவுக்கென வந்தவர்கள், பொருட்களைக் கொள்வனவு செய்யாது, குறித்த பெண்ணின் கழுத்திலிருந்த 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கிணங்க விரைந்து செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்களை, தியகல சோதனைச் சாவடியில் வைத்துக் கைதுசெய்துள்ளதுடன், ஹட்டன் மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago