George / 2016 ஜனவரி 16 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ரமேஷ்
'பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இம்மாதம் 10ஆம் திகதி 2,500 ரூபாய் வேதன உயர்வு வழங்குவதாக தொழில்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்த 2,500 ரூபாய், மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு சென்றடைய தடையாக இருப்பவர்களை முதலில் தீ மூட்ட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ்' தெரிவித்தார்.
தலவாக்கலை ஒலிரூட் கீழ்பிரிவு தோட்டத்தில்; புதிய கிராம வீடமைப்பு விழாவில் வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'கடந்த காலங்களில் தைப்பொங்கல் விழா என்ற பெயரில் கூத்தும் கும்மாளமும் கொட்டகலையில் கொண்டாடப்பட்டது. மாமிச உணவு போட்டு மக்களை வசப்படுத்தி வந்தனர்.
ஆனால், 2016ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா தமிழ் முற்போக்கு கூட்டணியின் அனைத்து அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய அதிகாரிகளும் மாகாண சபை உறுப்பினர்களும் ஒரே மேடையில் தொழிலாளர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டாடும் நாளாக மாறியுள்ளது.
அமரர்.சந்திரசேகரனின் நினைவாக அவரின் பெயரில் உருவாக்கப்பட்ட இந்த தனி வீடு கிராமம், மலையக வரலாற்றில் ஓர் இடத்தினை பெற்றுள்ளது. கடந்த காலங்களில் மலையகத்தின் தம்பி என ஒருவர் தம்பட்டம் அடித்து வந்தார்.
இன்று மூன்று அண்ணன்மார்கள் நான்கு தம்பிமார்கள் ஒரே மேடையில் முதன்முறையாக அமர்ந்து மக்கள் சேவையை முன்னெடுக்கின்றோம்.
தோட்ட தொழிலாளர்களுக்கு வேதனம் தந்த வேதனையை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் இம்மக்களுக்கான உரிமை பாதுகாக்க வேண்டும் என நான் தீ குளிக்க நாடாளுமன்றத்தில் துணிகரத்தை காட்டினேன்.
ஆனால், இது நாடகம் என்றார்கள். மக்களின் உரிமைக்காக நான் செய்தது தவறா? 2, 500 ரூபாய் சம்பள உயர்வு வழங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பார்வை தொழிலாளர் பக்கம் திரும்பியுள்ளது.
இம்மாதம் 10ஆம் திகதி 2,500 ரூபாய் சம்பள உயர்வு வழங்க தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு யாராவது தடையாக இருந்தால் அவர்களை முதலில் தீ மூட்ட வேண்டும்' என அவர் மேலும கூறினார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago