Kogilavani / 2021 ஏப்ரல் 04 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளமையானது, மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய துரோகம் என்றும் இது தமிழ்க் கல்வி வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,
மத்திய மாகாணத்தில் 522 தமிழ் பாடசாலைகளும் ஊவா மாகாணத்தில் 222 தமிழ் பாடசாலைகளும் உள்ளன என்றும் இவ்விரு மாகாணங்களிலும் தமிழ்மொழி மூல கல்வி மேம்பாட்டுக்காக, தமிழ் கல்வி அமைச்சுகள் உருவாக்கப்பட்டிருந்தன என்றும் தெரிவித்தார்.
எனினும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஆறு மாதங்களுக்கு முன்னர் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சை இல்லாமல் செய்ததாகவும் அதன் பின்னர் ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சையும் இல்லாமல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“தமிழ்க் கல்வி அமைச்சு இருந்தால் கல்விப் பணிப்பாளர் நியமனம், ஆசிரியர் நியமனம், சிற்றூழியர் நியமனம் என பலபல விடயங்களைச் செய்யலாம். தமிழ்மொழி மூல கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். தற்போது அந்த அமைச்சு இல்லாமல் செய்யப்பட்டமையானது, கல்வி வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.
“நாளொன்றுக்கு 20 கிலோகிராம் கொழுந்து பறிக்க வேண்டும் என தோட்ட முகாமையாளர்கள், தொழிலாளர்களை வற்புறுத்தி வருகின்னர். சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றன. எனவே, இவை தொடர்பில் உரியத்தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாயைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026