Editorial / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}


காஞ்சனகுமார ஆரியதாச
தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வரும் முறையற்ற வியாபார நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்வதற்காக, அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் திடீர் விஜயத்தை, இன்று (30) மேற்கொண்டார்.
பொருளாதார மத்திய நிலையத்தை அண்மித்த இடங்களில், களஞ்சியசாலையை நடத்தும் போர்வையில் வெளிநாட்டு வர்த்தகர்களுடன் இணைந்து, பாரியளவிலான உருளைக்கிழங்கு, வெங்காயம் விற்பனை செய்யும் இடத்துக்குச் சென்ற அமைச்சர், உடன் அமுலுக்கு வரும் வகையில், களஞ்சியசாலைக்குள் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத வர்த்தகத்தை நிறுத்துமாறு வர்த்தகர்களுக்கு உத்தரவிட்டதுடன், சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்குமாறு, நகர மேயர் ஜாலிய ஓபாதைக்கு உத்தரவிட்டார்.
மேலும் பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள பொது மலசலகூடத்தின் தூய்மையைப் பேணுமாறும் ஊழியர்களுக்குப் பணித்துள்ளார்.
அத்துடன் குறித்த பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில், நல்ல நிலையிலுள்ள கரட் பழுதடைந்த கரட்டுடன் கலந்து ஒரு கிலோகிராம் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததை, அமைச்சர் குறித்த கண்காணிப்பு விஜயத்தின் போது கைய்யுமெய்யுமாக பிடித்தார்.
மிகவும் சூட்சுமுமான முறையில் இந்த கரட் விற்பனையை முன்னெடுத்து வந்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பணித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago