Kogilavani / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்கள், இன்று (7) திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கொட்டகலை பொது சுகாதார காரியாலயம், தலவாக்கலை லிந்துலை நகரசபை ஆகியன இணைந்தே, இந்தத் திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர்.
புத்தண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய நகருக்கு வரும் நுகர்வோர் நலன் கருதியே, திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த பொது சுகாதார பரிசோதகர்கள், தலவாக்கலை நகரிலுள்ள அனைத்து உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர்.
இதன்போது பாவனைக்குதவாத பருப்பு, உழுந்து உட்பட சில பொருட்கள் மீட்கப்பட்டு தீ வைக்கப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago