2025 ஒக்டோபர் 27, திங்கட்கிழமை

தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் கிடைத்தது

Freelancer   / 2024 ஜூன் 10 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று (10) முதல் முறையாக மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் மொத்த நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவிலிருந்து 1700 ரூபாவாக உயர்த்துவதற்கு தொழிலாளர் ஆணையாளர் நாயகம் தீர்மானித்திருந்தார்.

எவ்வாறாயினும், இலங்கை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் தோட்ட உரிமையாளர்கள் சங்கமும் இவ்வாறான சம்பள அதிகரிப்புக்கு உடன்படப்போவதில்லை என தொடர்ந்தும் தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்கு மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் வழங்கப்பட்டது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .