Editorial / 2020 ஜூன் 30 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
திருமணத்துக்குப் பின்னர், பெண்ணொருவர் தனது பெயருக்கு பின்னால் கணவரின் பெயரையே பயன்படுத்தவேண்டும் என்று, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மலையக மக்கள் முன்னணியைக் கைப்பற்றப் போவதாக, சுயேட்சை வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள, மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்திருந்த கருத்துக்கு பதில் கொடுக்கும் முகமாகவே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
திருமணத்துக்குப் பின்னர், தனது பெயருக்குப் பின்னால் கணவரின் பெயரையே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், ஆகையால், அனுஷா அமேஷ்வரன் என்பவர், கட்சியில் இருந்து வெளியேறும் வரை, அமைச்சின் ஊடாகவே சம்பளம் பெற்று வந்தார் என்று தெரிவித்தார்.
இவ்வாறு சம்பளம் பெற்றுக்கொண்டே, அவர் தனித்துச் செயற்பட்டார் என்றும் இறுதிவரை இந்தச் சம்பளத்தை அவர் பெற்றுவந்தார் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மலையக மக்கள் முன்னணியை மீட்கப் போவதாக, அனுஷா சூளுரைத்துள்ளார் என்றும் தேர்தல் முடிந்த பின்னர் அதைப் பார்த்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
மலையக மக்கள் முன்னணியை தான் பொறுப்பேற்றபோது, அனுஷா மாணவியாகவே இருந்தார் என்றும் அந்த அளவு கட்சி முக்கியம் என்றால், அன்றே பொறுப்பேற்றிருக்கலாம் தானே என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
மலையக மக்கள் முன்னணி இன்னும் இருக்கிறது என்றால், அதற்கு கட்சியின் ஆதரவாளர்களே காரணம் என்றும் தலைமைத்துவம் வழங்குவதற்காகவே தன்னை அழைத்ததாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, சந்திரசேகரனின் கொள்கைகளை சிறந்தவை என்றும் நல்ல விடயமொன்று செய்யவேண்டும் என்பதற்காகவே தானும் வந்ததாகவும் கூறிய அவர், தான் எங்கிருந்தாலும் அந்தக் கட்சியில் இருந்திருந்தாலும் தலைவராகத்தான் இருந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago