2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 15 பேர் சுயதனிமையில்

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத். எச்.எம்.ஹேவா

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குடாஓயா பிரதேத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட 15 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (30) இத்திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த 15 பேரும்  எச்சரிக்கப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X