Kogilavani / 2017 ஜூன் 27 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரஹெராக்களில் பங்கேற்கும் யானைகளை கோபமடையச் செய்து, அவற்றினூடாக, பெரஹெராக்களை குழப்பும் மறைமுகத் திட்டமொன்று, விசமிகளால் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கண்டி, அஸ்கிரிய பீடத்தின் எழுதுவினைஞரான பூஜ்ய மெதகம தெரிவித்துள்ளார்.
கண்டி, அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரரிடம் ஆசி பெற்றுக்கொள்வதற்காக, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, தலதாமாளிக்கைக்கு, நேற்று முன்தினம் விஜயம் மேற்கொண்டிருந்த போதே, அஸ்கிரிய பீடத்தின் எழுதுவினைஞர் பூஜ்ய மெதகம இவ்விடயத்தை, அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளார்.
இலஞ்சம் வாங்கிக்கொண்டு இவ்வாறான விசமத்தனங்களில், விசமிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த பெரஹெராக்களை குழப்பும் நோக்கிலேயே, இவ்வாறான திட்டங்கள் தீட்டப்படுவதாக, தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கட்டானை ஸ்ரீ வர்தனாராம விகாரையில் அண்மையில் இடம்பெற்ற பொசன் பெரஹெராவில் பங்கேற்ற யானை ஒன்று தாக்கியதில், அவ்விகாரையைச் சேர்ந்த கரம்பே ராஹூல (வயது 26) என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
39 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
39 minute ago
57 minute ago