2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தீபாவளி கொண்டாட்டத்தில் சிரத்தை முக்கியம்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 20 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட காத்திருக்கும் பெருந்தோட்ட மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் பொருட்கள் கொள்வனவுக்காக நகரங்களுக்கு வந்து செல்லும் போது அவதானத்துடனும்,பாதுகாப்புடனும் செயற்பட வேண்டுமென நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இம்முறை தீபாவளி பண்டிகையைக் கொண்டாட மலையக மக்கள் தயாராகி வருகின்றனர்.இந்த நிலையில் மலையக பிரதேச நகரங்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வருகைத் தரும் பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு பிரதேச சபைக்கும் உண்டு.

ஆகையால், பிரதான நகரங்களில் பொலிஸ் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை பிரதேச சபை தவிசாளர் என்ற வகையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் பிரதேச மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரதேச சபை ஊடாக பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 அந்த வகையில் நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தப்பளை,நுவரெலியா, நானுஓயா போன்ற பிரதான நகரங்களில் பொலிஸ் கண்காணிப்பு நடவடிக்கைக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X