2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தீபாவளி கொள்ளையை தடுத்து நிறுத்தவும்

Editorial   / 2022 ஒக்டோபர் 19 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எச்.எம்.ஹேவா

தீபாவளி பண்டிகையின் போது, ​​ சில பொருட்களின் விலையை பல்வேறு வழிகளில் உயர்த்தி, மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை, சில மோசடி வியாபாரிகள் மேற்கொள்கின்றனர் எனத் தெரிவித்த அகில இலங்கை முற்போக்கு தொழிலாளர் முன்னணி எஸ்.பி இளங்கோ காந்தி  பெருந்தோட்டங்களை அண்மித்த நகரங்களில் விலை கட்டுப்பாட்டு சோதனைகளை முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக நுவரெலியா மாட்டத்தில் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் தயாராகி வருகின்றனர். எனினும், பெருந்தோட்டங்களை அண்மித்த நகரங்களிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் தீபாவளி கொள்ளை இடம்பெறுகிறது.

பயறு, உளுந்து, சீனி, கருப்பட்டி, தேங்காய் எண்ணெய், கோதுமை மா ஆகியவற்றுக்கு செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தின், கூடுதல் விலைக்கு விற்பனைச் செய்வதற்கு சில வர்த்தகர்கள் முயற்சிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பொருட்களின் விலைகளை தாங்கள் நினைத்தவாறு அதிகரித்தால்,  அப்பாவி மக்களால் முறையாக தீபாவளியை கொண்டாட முடியாத நிலைமையொன்று ஏற்படும். ஆகையால், விலை கட்டுப்பாட்டு சோதனைகளை முன்னெடுத்து,  அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கையை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X