Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Janu / 2024 ஜூலை 22 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோட்டல் ஒன்றில் தேநீர் மற்றும் குளிர்பானம் விற்பனை செய்கின்ற போர்வையில், கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரை 8 கசிப்பு போத்தல்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி மத்திய சந்தையில் உள்ள ஹோட்டலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகம் ஏற்படாத வகையில் குளிர்ப்பான போத்தல்களில் கசிப்புவினை பொதி செய்து வைத்துள்ளதாகவும் ஹோட்டல் கவுண்டரில் பணம் செலுத்திய பின்னர் , ஊழியர்களால் டீ கப்பில் கசிப்பூவை ஊற்றி கொடுப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சில காலமாக இடம்பெற்று வரும் இந்த வியாபாரத்தில், சந்தையில் வேலை செய்யும் நாட்டாமிகள், கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ஆகியோர் தினசரி வாடிக்கையாளர்கள் எனவும், அதிகாலை 5.00 மணி முதல் இந்த வியாபாரம் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago