Kogilavani / 2021 ஏப்ரல் 12 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், சிங்கள மக்களிடையே சமயம் மற்றும் கலை, கலாசார விடயங்களில் இருந்து வரும் ஒற்றுமை, ஐக்கியம் தொடர்ந்தும் மேலோங்க வேண்டும் என்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இப்புத்தாண்டுடன் இரு சமூகங்களுக்கிடையில் பரஸ்பரம் ஒற்றுமை, ஐக்கியம், சமத்துவம், சகோதரத்துவம், புரிந்துணர்வுகள், நல்லுறவுகள் மேலோங்கி நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், தொழிலாளர்களின் வாழ்வில் சுபீட்சம் நிலவக்கூடிய ஆரோக்கியநிலை, உருவாகியுள்ளதாகவும் அதற்கான சமிக்ஞைகளும் தென்படுவதாகவும் தெரிவித்தார்.
'பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொறுத்தவரையில், அவர்கள் பல்வேறு விடயங்களில் பல்வேறுப் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் அப்பாதிப்புக்கள் அனைத்தும் இப்புத்தாண்டுடன் நீங்கப்பெற வேண்டும் என்றும் அ.அரவிந்தகுமார் எம்.பி மேலும் தெரிவித்தார்.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago