Kogilavani / 2021 மார்ச் 23 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
இராகலை மாகுடுகலை தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்துக்கு, வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களும் ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.
இராகலை. மாகுடுகலை மற்றும் கிளன்டெவன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தொடர்ந்து 17ஆவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்ற நிலையில், தொழிலாளர்களுக்கு ஆதரவுத் தெரிவித்து, வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்கள், மாகுடுகலை சந்தியில் இன்று (23) சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களான தமிழ்மாறன் ஜனார்த்தனன், ஹரிச்சந்திரன் சண்முகம், கலியுகநாதன், மலையக மக்கள் முன்னணியின் அமைப்பாளர் யோகேஸ்வரன் செல்வராஜ், உப தலைவர் ஜெயக்குமார், புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய அமைப்பாளர் மகேந்திரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மாகுடுகலை மற்றும் கிளன்டவன் ஆகிய தோட்டங்கள், மத்திய வங்கி பிணை முறிவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் ஆலோசியஸின் முகாமைத்துவத்தின் கீழ் 'செரண்டிப்பிட்டி இலங்கை பெருந்தோட்டம்' என்ற கம்பனியின் மேற்பார்வையின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டு வருவதாக மேற்படி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்.
மத்துரட்ட பெருந்தோட்டக் கம்பனியின் கீழ், இந்த் தோட்டங்கள் இயங்குவதாகத் தொழிலாளர்களுக்கு கூறப்பட்டுள்ளதுடன், தொழிலாளர்களின் சம்பளப்பற்றுச்சீட்டு பெயரட்டைகள் என்பன மத்துரட்ட பெருந்தோட்ட கம்பனியின் பெயரிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தனர்.
ஆனால், தோட்டத்தை வேறொரு கம்பனி, நிர்வாகம் செய்வதாக போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக கருத்துரைத்த வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் தமிழ்மாறன் ஜனார்த்தன், மாகுடுகலை பெருந்தோட்ட நிர்வாகமானது, ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை வேலைக்கு அமர்த்தியிருப்பது தொடர்பாக பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து நுவரெலியா உதவித் தொழில் ஆணையாளர், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு தான் யோசனை முன்வைப்பதாக, தோட்ட நிர்வாகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்த போதிலும் அதனை இதுவரையில் தோட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
'இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் 17ஆவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருதுடன், நாங்கள் இந்தத் தோட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பிரதேச சபை உறுப்பினர்கள் என்ற வகையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றோம். தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் காடுகளாகிவிட்டன. அதனைத் திருத்துவதற்கு தோட்ட நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு நடந்து கொண்டால், தோட்டங்கள் எவ்வாறு இலாபத்தில் இயங்கும்.
'தோட்ட நிர்வாகத்தில் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவதை எக் காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை எங்களுடைய மக்களை அச்சுறுத்துகின்ற செயலாகவே நாங்கள் பாரக்கின்றோம்' என்றார்.

21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026