2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தொழிலுக்கு செல்வோருக்கு பஸ்கள் இன்மையால் சிக்கல்

Editorial   / 2020 மே 12 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரா.யோகேசன்

பல நாள் ஊரடங்கு தளத்தப்பட்டு, மலையகம் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள போதிலும், ஹட்டனிலிருந்து செனன், றொசல்ல, குயில்வத்த, வட்டவளை, கினிகத்தேனை, நாவலப்பிட்டி போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் பஸ்கள் இல்லாமையால், மக்கள் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் ஹட்டனிலிருந்து கண்டிக்குச் செல்லும் அநேகமான தனியார் பஸ்கள் சேவைகயில் ஈடுபடாமல் இருப்பதாலும் பலர் நேற்று (11) மாலை நேரங்களில், பஸ்களுக்காக, வீதியில் காத்திருந்தனர்.

தனியார், அரசாங்க நிறுவகங்களில் சேவைகயில் ஈடுபடும் கினிகத்தேனை, நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர்கள், தாங்கள் வீடுகளுக்குத் திரும்பவேண்டும் என்று, ஹட்டன் டிப்போவிடம் பல மணிநேரம் கோரிக்கை விடுத்து வந்ததாகவும் தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .