Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஆ.ரமேஸ் / 2019 மார்ச் 25 , மு.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நடைபெறும் தவறான அரசியலை விரட்டியடித்து, உழைப்பாளர்களால் உருவாகும் புதிய அரசாங்கத்தை, மக்கள் விடுதலை முன்னணி உருவாக்கும் என்றுத் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, அவ்வாறான அரசாங்கத்தை உருவாக்க, தோட்டத் தொழிலாளர்கள், தங்களது கட்சியுடன் கைகோர்க்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
நுவரெலியாவுக்குட்பட்ட தோட்டப் பகுதிகளுக்கு, தனது இரண்டாவது விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது, ராகலை, கோடன், ஹைபொரஸ்ட் பகுதிகளுக்கும் அவர் சென்றிருந்தார்.
இதன்போது இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடன்சுமையைச் சுமந்துகொண்டு, அபிவிருத்தித் திட்டங்களை முறையாக முன்னெடுக்காத அரசாங்கம், பொதுமக்கள் மீது வரிச்சுமையைத் திணித்துள்ளது எனக் குற்றஞ்சாட்டியதோடு, நாட்டுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்காது, அரசாங்கம் அவர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறினார். தொழிற்சங்கங்களின் கைப்பிடிக்குள் சிக்கித் தவிக்கும் தோட்டத் தொழிலாளர்களை, அதிலிருந்து விடுவித்து, தேசிய அரசாங்கத்தின் மூலம், அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து, மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை, மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்து வருவதாக, இதன்போது அவர் கூறினார்.
16 minute ago
23 minute ago
28 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
28 minute ago
38 minute ago