Editorial / 2024 ஜூலை 30 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல இ/நிரியெல்ல தமிழ் வித்தியாலயத்தில் சாதாரண தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் மீது பாடசாலை நேரத்தில், தோட்ட கள அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் கடுமையாக கண்டித்துள்ளார்.
சம்பவத்தை கேள்வியுற்று, பாடசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்களுடன் கலந்துரையாடியதுடன் இவ் விடயம் தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு, குறித்த தோட்ட உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் செய்யும் படி தோட்ட அதிகாரிக்கும் வலியுறுத்தினார்.
மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நிவிதிகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்தார்.
நிவித்திகல பிரதேச வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலுக்குள்ளான மாணவனை சந்தித்து நலம் விசாரித்தார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago