Editorial / 2017 ஜூலை 10 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}





எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ், ஆர்.ரமேஸ்
தோட்ட நிர்வாகத்தின் எதேச்சதிகார போக்கைக் கண்டித்து, அக்கரப்பத்தனை, ஊட்டுவள்ளி தோட்டத்தின் பிரோமோர் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில், இன்று ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாகம், 18 கிலோகிராம் கொழுந்தை பறிக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்தி வருவதாகவும், 18 கிலோவுக்கும் குறைவாக கொழுந்து பறித்த தொழிலாளர்களுக்கு, அரைநாள் சம்பளத்தையே தோட்ட நிர்வாகம் இம்மாதம் வழங்கியுள்ளதாகவும்,ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்தனர்.
தோட்ட நிர்வாகம், தமது மாத சம்பளத்தை குறைத்து வழங்கியுள்ளதால் தாம் பாரிய பொருளாதார சிக்கலை, இம்மாதம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
வழங்கப்பட்ட சம்பள சிட்டையில், அரைநாட் சம்பளமே போடப்பட்டுள்ளது. எனவே, தமக்கு முழுநாளுக்குரிய சம்பளத்தை தோட்ட நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்தே, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு வருகைத் தந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், தோட்டத்திலுள்ள கொழுந்து மடுவத்தில் வைத்து, தோட்ட நிர்வாகத்துடன் யில் ஈடுபட்டனர்.
இதன்போது, தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில் வாய்தர்க்கமும் ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், தோட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர், தொழிலாளர்களுக்கு அரைநாள் சம்பளத்தை வழங்க தோட்ட நிர்வாகம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
10 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago