Kogilavani / 2017 மே 18 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்
நானுஓயா பொலிஸ் பிரவு, தலவாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்தின் எதேச்சதிகாரமான போக்கைக் கண்டித்து, தோட்டத்திலுள்ள கொழுந்து மடுவத்துக்கு முன்பாக, இன்றுக் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கொடுப்பனவுகளை, உரிய நேரத்தில் முழுமையாக கொடுக்காது, தோட்ட நிர்வாகமானது அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க மறுக்கின்றது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இத்தகைய குறைபாடுகளை தட்டிக்கேட்டால், தோட்ட முகாமையாளர் பொலிஸாரை அழைத்து அச்சுறுத்தல் மிரட்டல்
இது தொடர்பில் மேலும் கூறிய ஆர்ப்பாட்டக்காரரகள்,
“கடந்த மாதம், இத்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இவரது இறுதிகிரியை நடத்துவதற்கான மரண நிதியை தோட்ட நிர்வாகத்திடம், மரண கமிட்டித் தலைவர்கள் கேட்டனர். தோட்ட நிர்வாகமானது, மரண நிதியை முழுமையாக கொடுக்காது, வழமைப்போன்றே குறைத்து கொடுத்தது.
இதனைத் தட்டிக் கேட்ட தோட்டத் தலைவரை, தோட்ட நிர்வாகம் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதுடன், தோட்டத் தலைவர் தன்னை தவாறான வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி பொலிஸ் நிலையத்திலும், தோாட்ட முகாமையாளர் முறைப்பாடு பதிவு செய்தார்.
பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட தோட்டத் தலைவரை, மீண்டும் பணிக்கும் அமர்த்த வேண்டும். தோட்ட நிர்வாகம் இதனை செய்யாத பட்சத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர்.


31 minute ago
51 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
51 minute ago
8 hours ago