2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தாயின் கையை வெட்டிய மகள் தலைமறைவு

Princiya Dixci   / 2016 மே 07 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா

இளைஞன் ஒருவனுடன் ஏற்பட்டிருக்கும் கள்ளக்காதலை நிறுத்துமாறு கூறிய தாயின் எச்சரிக்கையை ஜீரணிக்கமுடியாத மகள், தனது தாயைக் கத்தியினால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

பதுளை புறநகர் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பதுளைப் பொலிஸார், தலைமறைவாகியுள்ள யுவதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

கத்தி வெட்டுக்காயங்களுடன் தாய், பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மகளின் கள்ளக் காதல் குடும்பத்துக்கு ஏற்றதல்ல. இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு தாய், மகளைக் கடுமையாக எச்சரித்ததன் விளைவாக, ஆத்திரம் கொண்ட மகள் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்துவந்து தனது தாயை வெட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தாயின் சகோதரரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பதுளைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .