Gavitha / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஊவா மாகாணத்துக்குட்பட்ட புத்தல பகுதியிலுள்ள கூட்டுறவுச் சங்க கடையில் பொருட்ளைத் திருடிக்கொண்டிருந்த இருவரை கைது செய்து வெல்லவாய நீதவான் நீதிமன்ற நீதிமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06) ஆஜர்செய்த போது, அவ்விருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, குறித்த கூட்டுறவுச் சங்கக் கடைக்குச் சென்ற பொலிஸார், அங்கு திருடிய பொருட்களை பொதி செய்துக்கொண்டிருந்த இருவரை கைது செய்தனர்.
இதன்போது திருடிய பொருட்களையும் சிறியரக லொறி ஒன்றையும் பொலிஸார் மீட்டிருந்தனர். இது தொடர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
29 minute ago
41 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
59 minute ago