Sudharshini / 2016 பெப்ரவரி 07 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி பகுதியில் நீண்ட காலமாக பல்வேறு திருட்டுச் சம்பங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் இருவரை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், சனிக்கிழமை (06) கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பேராதனை, தவுலகல மற்றும் கடுகண்ணாவை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லொறிகள் மற்றும் டிப்பர்களிலுள்ள பெற்றரிகள் மற்றும் டயர் உட்பட பல பொருட்களை இரவு நேரங்களில் திருடி வந்துள்ளனர்.
கைதான இருவரும் 37 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் கடுகண்ணாவை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இவர்கள் திருட்டிய பொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தி வந்த முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
23 minute ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
13 Apr 2026