Kogilavani / 2016 ஜனவரி 14 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நள்ளிரவில் வீதியில் நின்றிருந்த இரு யுவதிகளை முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த சிலர் துரத்திச் சென்றபோது, அவர்களை கிராமவாசிகள் மீட்டு பொலிஸாரின் உதவியுடன் பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று அவிஸ்ஸாவளையில் நேற்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. 19 மற்றும் 15 வயதுடைய இரு யுவதிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அவிஸ்ஸாவளை - இரத்தினபுரி வீதியில் நேற்று அதிகாலை 1 மணியளவில் நின்றுகொண்டிருந்த மேற்படி யுவதிகள் இருவரை, முச்சக்கரவண்டியொன்று பின்தொடர்ந்துள்ளது. யுவதிகள் இருவரும் முச்சக்கர வண்டியை கண்டு ஓடியுள்ளதுடன் அருகிலுள்ள வீடொன்றினுள் நுழைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியின் பிடியிலிருந்து யுவதிகளை காப்பற்றிய அவ்வீட்டார், அது தொடர்பில் அவிஸ்ஸாவளை
பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், யுவதிகளை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago