2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

நான்காவது தடவையாகவும் அக்கு​றணை மூழ்கியது

மொஹொமட் ஆஸிக்   / 2018 டிசெம்பர் 23 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தில், நேற்று முன்தினம் (22) இரவு பெய்த கடும் மழை காரணமாக, கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியின், அக்குறணை நகரம், நேற்று இரவு 11.30 மணியளவில், மூழ்கியது.  

கடந்த மூன்று மாதங்களில் பெய்த கடும் மழையால் இதுவரையில், நான்காவது தடவையாக அக்குறணை நகரம் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நேற்று முன்தினம் இரவு முதல், அக்குறணை நகரம் நீரில் மூழ்கியுள்ளமையால், சுமார் 100க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  

இதனால், கண்டி - யாழ்ப்பாணத்துக்கான ஏ9 வீதியின் போக்குவரத்து, சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேலாகப் பாதிப்படைந்திருந்தது.  

அக்குறணை நகரூடாக ஓடும் பிரதான ஆறுகளிலிருந்து நீர்ப் பெருக்கு ஏற்பட்டதால், நகரின் பிரதான வீதியும் துனுவிலை வீதியும் நீரில் மூழ்கியன. இவ்வாறு, அக்குறணை நகரம் நீரில் மூழ்குவது வழமையான ஒன்றாக மாறி வருவதால், நகரத்தின் வர்த்தக நிலையங்களை நடத்தி வருவோருக்கும் வீட்டில் வசிப்போருக்கும், பாரிய நட்டம் ஏற்படுவதாக, பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

இதேவேளை, நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழை காரணமாக, இன்று (23) காலை, பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது  

பொல்கொல்ல நீர்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரியொருவர், இது தொடர்பாகத் தெரிவிக்கையில்,  

நீர்த்தேக்கத்தில் திறக்கப்பட்டுள்ள வான்கதவு மூலம், ஒரு செக்கனுக்கு 55 கனமீற்றர் நீர், கங்கைக்கு வெளியாவதாகவும் மஹாவலி கங்கையின் இரு புறங்களிலும் வாழும் மக்கள், அவதானத்துடன் செயற்படுமாறும், அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .