2026 ஜனவரி 21, புதன்கிழமை

நிர்வாகக் கெடுபிடி; தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா,  எஸ்.சதீஸ்

நிர்வாகக் கெடுபிடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொகவந்தலாவை பொகவான தோட்டத் தொழிலாளர்கள், பொகவந்தலாவ குயினா தோட்ட பிரதான வீதி பொகவான சந்தியில், இன்று (20) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளொன்றுக்கு 20 கிலோகிராம் பச்சைத்தேயிலை கொழுந்து பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

“இதுவரை காலமும் 15 கிலோகிராம் பச்சைத்தேயிலேயே பறித்து வந்ததாகவும் ஆனால் 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பின் பின்னர் 20 கிலோ பச்சைக்கொழுந்து நாளொன்றுக்கு பறிக்க வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அவ்வாறு 20 கிலோகிராம் கொழுந்து பறிக்காவிட்டால் வாரத்தில் 03 நாட்களே வேலை வழங்கப்படும் என அச்சுறுத்தல் விடுப்பதாகவும் இதுவரை வழங்கி வந்த சுகாதாரம் தொடர்பான  சலுகைகளும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள்  தெரிவித்தனர்.

இவ்விடயத்தில், ஜனாதிபதி, பிரதமர், தொழிலமைச்சர் மற்றும் மலையகப் பிரதிநிதிகள், தோட்டக்
கம்பனிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் தோட்ட முகாமையாளரிடன் தொடர்புகொண்டு கோட்ட போது, தற்போது
தேயிலை கொழுந்து அதிகளவில் காணப்படுவதாகவும்  இதன் காரணாமகவே கொழுந்தின் நிறையை அதிகரிக்கக் கோரியதாகவும் தேயிலைச் செடிகளில் வளர்ந்திருக்கும்
பச்சைக் கொழுந்தை வீணாக வெட்டி வீச முடியாதெனவும் தெரிவித்தார்.

சுமார் 300 தொழிலாளர்கள்  இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஒரு
மணித்தியாலத்தின் பின்னர் கலைந்துச்சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X