2025 மே 05, திங்கட்கிழமை

நீராடச் சென்ற 14 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு

Freelancer   / 2024 பெப்ரவரி 25 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நாகசேனை ஆற்றில் நீராடச் சென்ற 14 வயதுடைய சிறுவனின்  சடலம் இன்று மாலை 4 மணி அளவில் மீட்கப்பட்டுள்ளது .

இன்று பிற்பகல் மூவர் குறித்த பகுதிக்கு குளிக்கச் சென்ற போது ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார். 

இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரம் பிரதேச மக்கள் குறித்த ஆற்றில் சிறுவனை தேடிய போது, அவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்,

மரணித்த சிறுவனின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக லிந்துலை வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார். 

இவ்வாறு மரணித்த சிறுவன்  தலவாக்கலை நகரத்தைச் சேர்ந்த 14 வயதுடைய திலிப்ப கமகே என்பது குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X