Kogilavani / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு, ஆர்.ரமேஸ்
ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச வங்கிகளின் ஊழியர்கள், நாடளாவிய ரீதியில், இன்று (1) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த நிலையில், அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், நுவரெலியா கிளை அரச வங்கிகளின் ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் வங்கி, இலங்கை வங்கி, அபிவிருத்து வங்கி உட்பட அரச வங்கி உத்தியோகத்தர்கள், ஊழியர்களுமாக சுமார் 70 பேர் வரை கலந்துகொண்டனர்.
இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், “ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்கவும்” “இரண்டு வருடப் பயிற்சியை நிறைவு செய்த வங்கி சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்தனர்.
அரச வங்கிகளின் ஊழியர்களது கோரிக்கைகளை, பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று
தெரிவித்துள்ள போதிலும் அது உறுதிபடுத்தப்பட்டவில்லை என்றும்
தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டாவிட்டால், நாடளாவிய ரீதியிலுள்ள அரச வங்கி சேவையாளர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026