Editorial / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.கணேசன்,டி.சந்ரு)
வலப்பனை நில்தண்டாஹின்னவிலிருந்து தெறிபாஹா நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நில்தண்டாஹின்ன தெறிபாஹா பிரதான வீதியில் அபன்எல்ல பகுதியில் விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (27) காலை 9 மணியளவில் வீதியை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 37 பேர் காயமடைந்து, வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 37 பேரில் 13 பேர் நுவரெலியா வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பில் தெறிபாஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026