2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

நுவரெலியா மாவட்டச் செயலாளராக நந்தன கலப்பட பதவியேற்பு

Kogilavani   / 2021 மார்ச் 29 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

நுவரெலியா மாவட்டச் செயலாளராக, மத்திய மாகாண முன்னாள் பிரதான  நந்தன கலப்பட இன்று (29) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.  

நுவரெலியா மாவட்ட செயலாளராக கடமையாற்றிய எ.பீ.ஆர். புஸ்பகுமார விவசாய அபிவிருத்தி அமைச்சு செயலாளராக கடந்த மார்ச் முதலாம் திகதி இடம்மாற்றம் பெற்று சென்றதையடுத்துநந்தன கலபட நுவரெலியா மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வலப்பனை பிரதேச பிரதி செயலாளராகவும் அதனைத் தொடர்ந்து அங்குராங்கெத்த, உடுநுவர, அக்குறனை ஆகிய இடங்களில்பிரதேச செயலாளராகவும், அதனைத் தொடர்ந்து மத்திய மாகாண பிரதான செயலாளராகவும் மத்திய மாகாண கல்வி செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற  பதவியேற்பு நிகழ்வில், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ.ரட்னாயக்க, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி  சபையின் இணைத் தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்க உட்பட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X