Editorial / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ்
சர்வதேச மே தின நிகழ்வை, இம்முறை நுவரெலியா மாநகரில் நடத்த, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக, நுவரெலியா நகர இ.தொ.கா அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா, இன்று (19) தெரிவித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை, இ.தொ.காவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி பி.இராஜதுரை, மாகாண அமைச்சர் மருதுபாண்டி ரமேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்து வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நுவரெலியா மாநகருக்கு மத்தியில் மேடையமைத்து, மேதின நிகழ்வைக் கொண்டாடவும் நகரில், மேதினப் பேரணியை நடத்தவும், மாநகர சபையின் முதல்வர் மற்றும் உறுப்பினர்களின் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளதாக, அவர் கூறினார்.
மேலும், இம்முறை நடைபெறவுள்ள மேதின நிகழ்வில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பிலான பல கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்புகள், பின்னர் அறிவிக்கப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026