2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நூல் வெளியீடு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயம் (டிக்கோயா நுண்கலைக் கல்லூரி) இந்து மா மன்றத்தின் ஏற்பாட்டில், அட்சயம் வாணி விழா சிறப்பு மலர் வெளியீடு, சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

கல்லூரியின் அதிபர் எம்.மூவேந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பீ சிறிதரன் காப்பாளராகவும் பிரதம அதிதியாக ஹட்டன் வலயக்கல்வி பணிப்பாளர் வீ.சாந்தகுமார், கோட்டம் 1 க்கான கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரெங்கசாமி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அட்சயம் சிறப்பு மலர் ஆய்வை, ஆசிரியர் ஆலோசகர் சி.கணபதிபிள்ளை நிகழ்த்துவார். மேலும், மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் போட்டி நிகழ்வுகளின் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிகழ்களும் பரிசில்களும் வழங்கப்படும் என இந்து மா மன்றத்தின் தலைவரும் ஆசிரியருமாகிய அன்னமுத்து சந்திரமோகன் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .