2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

நிகழ்வுகளுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை கடந்த ஆறு மாதகாலமாக இடம்பெற்று வந்தது. இந்த யாத்திரை காலம் எதிர்வரும் வெசாக் போயா தினத்தன்று முடிவுபெறவுள்ளது.

இந்த யாத்திரை காலத்தில் நடாளாவீய ரீதியில் மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளும் தரிசனத்துக்காக வந்து சென்றுள்ளனர்.

இந்த யாத்திரை காலப்பகுதியில் பொதுமக்களின் அனைத்து தேவைகளுக்கும் உதவி கரம் நீட்டிய பொலிஸார், ஊடாகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் உள்ளிட்ட குடிநீர் வழங்கல் சபை மற்றும் போக்குவரத்து சபைகள் அடங்களாக சுகாதார சேவை பிரிவினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22ஆம் திகதி சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலம் நிறைவுபெறுவதை முன்னிட்டு, சிவனொளிபாமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இன்று நல்லதண்ணியில் அமைந்துள்ள கிராம சேவகர் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதில் மேற்குறித்த அனைத்து திணைக்களங்களையும் சேர்ந்த அதிகாரிகள் உட்பட அம்பகமுவ பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நன்றி தெரிவித்து உரையாற்றிய நாயக்க தேரர் தெரிவித்ததாவது,

இம்முறை இடம்பெற்ற சிவனொளிபாதமலை யாத்திரை காலம் முடிவடையும் தருணத்தில் இருக்கும்போது அதிகமான மக்கள் சென்றமை பெருமையை அளிக்கின்றது.

இவர்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் இடம்பெற்றிருக்கலாம். குடிநீர், மலசலகூடம் வசதிகள், போக்குவரத்து இடையூறு போன்ற பிரச்சினைகளுக்கு இவர்கள் முகங்கொடுத்திருக்கலாம்.

ஆனால், எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளை வரவிடாமல் முன்கூட்டியே ஆலோசனைகள் மேற்கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு இந்த சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தை சிறப்பிக்க அணைவரும் ஒன்றுக்கூட வேண்டும் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .