Sudharshini / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை நிலவி வருவதால் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக வரும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பொருளாதார மட்டத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள இம்மக்கள், வைத்தியர்களினால் எழுதிக்கொடுக்கப்படும் மருந்துகளை மருந்தகங்களில் பெருமளவு பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதென தெரிவிக்கன்றனர்.
எனவே, இந்த பிரதேச மக்களின் நலன்கருதி சுகாதாரத் திணைக்களம் குறிப்பிட்ட வைத்தியசாலைகளுக்கு மருந்து வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இது தொடர்பாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர். சாந்தி சமரசிங்கவிடம் நாம் வினவியபோது, 'வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மற்றும் சுகாதார குறைபாடுகள் தொடர்பில், கணினி மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளும் நவீன முறையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே, விரைவில் இக்குறைபாடுகள் நிவர்த்திக்கப்படும்' என அவர்; தெரிவித்தார்.
21 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago