2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பசறை விபத்து; நட்டஈடு வழங்கல்

Kogilavani   / 2021 மார்ச் 28 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா, பாலித ஆரியவன்ச
 
பசறை 13ஆவது மைல் கல்லருகே, கடந்த சனிக்கிழமை (20) இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும், நேற்று (27) நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
 
ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம், போக்குவரத்து ஆணையகம் மற்றும் ஊவா மாகாண போக்குவரத்துத் திணைக்களம் என்பன இணைந்து நட்டஈட்டை வழங்கவுள்ளன.
 
இதற்கமைவாக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 95,000 ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 15,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன. 
லுணுகலையில் நேற்று  (27) நடைபெற்ற இந்நிகழ்வில், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
ஊவா மாகாண ஆளுநர் திணைக்களம் 30,000 ரூபாய், போக்குவரத்து ஆணையகம் 25,000 ரூபாய், ஊவா மாகாண போக்குவரத்துத் திணைக்களம 15,000 என்ற அடிப்படையில், இந்த நட்டஈட்டுக் கொடுப்பனவை வழங்கியுள்ளன.
 
இதேவேளை, சுமார் 250 அடிப பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான தனியார் பஸ், ஆறு நாட்களுக்குப் பின்னர், நேற்று  (27) மாலை விசேட இயந்திரமொன்றின் மூலம் பிரதான வீதிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
மேற்படி விபத்தில், 15 பேர் பலியானதுடன் 33 பேர் கடுங்காயங்களுக்குள்ளாகியிருந்தனர். 
 
பஸ்ஸின் சிதைவுகள், பசறை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுச்செல்லப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X