Kogilavani / 2021 மார்ச் 18 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடை மற்றும் சுற்றுப் பிரதேசங்களில் யூரியா பசளைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தேயிலை, மிளகு, மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டு வருவம் விவசாயிகள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இப்பிரதேசத்தில் விவசாயத்துக்குப் பொருத்தமான காலநிலை நிலவிவருகின்ற போதிலும் பசளைத் தட்டுப்பாடு காரணமாக, விவசாய நடவடிக்கைகளைத் தொடர முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பலாங்கொடைப் பிரதேசத்தில் தேயிலை மிளகு உற்பத்தி மற்றும் மரக்கறிச் செய்கை பரவலாக இடம்பெற்று வருகிறது.
இப்பசளை தட்டுப்பாட்டினால் விவசாயிகளின் தனிப்பட்ட நலன்கள் பாதிக்கப்படுவதை போன்றே தேசிய உற்பத்தி விளைச்சலில் இந்நிலைமை பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக பிரதேச விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய கமத்தொழிற் சங்கங்கள் கவலை தெரிவிக்கின்றன.
எனவே இது தொடர்பில் உரியத் தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் என்று, விவசாயிகள், விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026