Kogilavani / 2017 மே 01 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
பட்டாசு வெடித்துச் சிதறியதால், அம்பகமுவ பிரதேச சபைக் காரியாலத்துக்கு முன்பாக இருந்த புற்தரை தீக்கிரையாகியுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின ஊர்வலம், கினிகத்தேனையிலுள்ள அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்றுக் காலை ஆரம்பமானது. இதன்போது, காங்கிரஸின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொளுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
இதன்போதே, ஒரு பட்டாசிலிருந்து வெடித்துச் சிதறிய தீப்பொறி, அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு முன்பாகவிருந்த புற்தரையில் விழுந்துள்ளதுடன் புற்தரையில் தீ பரவத் தொடங்கியது.
கினிகத்தேனை பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


37 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
1 hours ago