Kogilavani / 2021 மார்ச் 24 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திரவிராஜ் அபயசிறி
மத்திய மாகாண போக்குவரத்துத் திணைக்களத்தின் அதிகாரிகள், தன்னிச்சையாக சாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாத்தளை, கண்டி, கலேவெல பகுதிக்குச் சேவையில் ஈடுபடும் பஸ்கள், நேற்று (24) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
கலேவெலயிலிருந்து பேராதனைக்குப் போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக, பஸ்ஸொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால், மேற்படி வழித்தடச் சேவையில் வழமையாகப் போக்குவரத்தில் ஈடுபட்டுவரும் ஏனைய பஸ்கள் வருமானத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள சாரதிகள், நடத்துநர்கள் தெரிவித்தனர்.
எனவே, மேற்படி பஸ்ஸுக்கான வழித்தட அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறும் அனுமதிப்பத்திரம் வழங்கிய அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டதாக, மாத்தளை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிந்தர லியனாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துரைத்த மத்திய மாகாண போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைவர் ஹசின விஜேத்திலக்க, கலேவெலியிலிருந்து அளுத்கொட, அக்குறணை, கண்டி, பேராதெனிய ஆகிய பகுதிகளுக்குப் பயணிக்கும் அரச, தனியார் ஊழியர்கள் மற்றும் பேராதனை வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவே, கலேவெலயிலிருந்து மாத்தளைக்குப் பயணிக்கும் தனியார் பஸ்ஸூக்கு பேராதனை வரை பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கியதாகத் தெரிவித்தார்.
அத்துடன் வழமையாக போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மேற்படி பஸ்ஸுக்கு நேர அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசியல் உள்நோக்கத்துக்காகவே, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026