Gavitha / 2021 மார்ச் 02 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா, நடராஜா மலர்வேந்தன்
பதுளை மாவட்டத்தில், தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில், நேற்று (01) உயிரிழந்த நபருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறதி செய்யப்பட்டதை அடுத்து, பதுளை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 8ஆக அதிகரித்துள்ளது என, பதுளை மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணியினர் தெரிவித்தனர்.
பதுளை மாவட்டத்தில் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில், மாரடைப்பு காரணமாக 68 வயதுடைய நபர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பயனளிக்காமையினால், நேற்று (01) அவர் உயிரிழந்தார். இந்நிலையில், குறித்த நபரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கொரோனா வழிமுறைகளின் பிரகாரம், குறித்த சடலம், தகனம் செய்யப்பட்டது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago