2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பதுளையில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் மரணம்

Kogilavani   / 2021 மார்ச் 18 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
 
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி, நேற்று (17) இரவு மரணமடைந்துள்ளார்.
 
பதுளை மீராவத்தையைச் சேர்ந்த 87 வயது நபரே மரணமடைந்துள்ளார். 
 
இவரது மரணத்தையடுத்து,  பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்வடைந்துள்ளது.
 
கடந்த மூன்று மாதங்களில் பதுளையில் மூன்று பேரும், தியத்தலாவையில் மூன்று பேரும், வெலிமடையில் இருவரும், பண்டாரவளையில் ஒருவருமாக ஒன்பது பேர், கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X